சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா – தமிழக முதலமைச்சர்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குகிறார் என்ற உண்மையை புரிந்து கொண்ட தமிழக மக்கள் நடந்து முடிந்த இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தக்க தண்டனை வழங்கியுள்ளனர். இனிவரும் தேர்தல்களிலும் ஸ்டாலினுக்கு தக்க தண்டனையை மக்கள் வழங்குவார்கள் என உறுதியாக நம்புவதாக குட்டிக்கதை சொல்லி திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பேச்சு.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் இதில் துணை முதலமைச்சர் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து மணி மண்டபம் அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழா துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதலமைச்சர் தமிழ் பத்திரிகை உலகிற்கு சிறந்த தொண்டாற்றியவர் சிவந்தி ஆதித்தன் தமிழகத்தில் 70 தலைவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவந்தி ஆதித்தனுக்கு 71வது மண்டபமாக அமைகிறது தமிழ்ப் பத்திரிகை உலகில் சிறப்பாக அவர் பணியாற்றினார் என அவரது சாதனைகளை துணை முதலமைச்சர் நினைவுகூர்ந்தார், தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இளவயதிலேயே பத்திரிக்கை பொறுப்பிற்கு வந்த சிவந்தி ஆதித்தன் 3 பதிப்பாக இருந்த தினத்தந்தி நாளிதழை 15 பதிப்புகளாக உயர்த்தியுள்ளார். அதிமுக அரசு சொன்னதை செய்வதோடு சொல்லாததையும் செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் மழை நீர் சேகரிக்க குடிநீர் மராமத்து பணிகள் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உலக தரத்திற்கு இணையாக கல்வி கிடைக்க மடிக்கணினி திட்டம் மருத்துவ காப்பீட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தமிழர் திருநாள் கொண்டாட்டத்திற்காக நிதி ஒதுக்கி சிறப்பாக செயலாற்றி உள்ளது மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 260.06 மதிப்பில் 47 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன் மருத்துவத்துறை குடிநீர் வடிகால் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் 72 கோடி மதிப்பில் 15 முடிவடைந்த பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது 35 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது அதில் 15 திட்டங்கள் முடிவடைந்துள்ளது. 17 திட்டங்கள் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது தமிழகம் பல்வேறு துறைகளின் கீழ் சிறப்பாக செயலாற்றி விருதுகளை குவித்து வருகிறது அதிமுக அரசு எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கும் என பேசிய முதலமைச்சர் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார். செயல்படுத்த முடியாத வற்றை வாக்குறுதிகளாக கூறி ஒருசிலர் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றனர் அவர்கள் செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை கூறுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் நடந்து முடிந்த இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கியுள்ளனர் அடுத்து வரும் தேர்தல்களில் இந்த தண்டனை தொடரும் என தான் உறுதியாக நம்புவதாக முதலமைச்சர் தெரிவித்தார் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் 5 2.46 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கப்படும் சாத்தான்குளம் உள்ளிட்ட இரண்டு தாலுகாகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட 6.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் இந்த விழாவில் வழங்கினார் விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் ஆர் பி உதயகுமார் எம்சி சம்பத் செல்லூர் ராஜு கடம்பூர் ராஜு ராஜலட்சுமி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *