ஜூன் 28ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு கப்பல் வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜு

ஏற்கனவே நமது மாவட்டத்திற்கு 2 கப்பல்கள் வரப்பெற்றது. ஜூன் 2ம் தேதி இலங்கை நாட்டில் இருந்து 700 நபர்களுடன் ஒரு கப்பலும், கடந்த 7ம் தேதி மாலத்தீவு நாட்டில் இருந்து 700 நபர்களுடன் ஒரு கப்பலும் நமது மாவட்டத்திற்கு வந்தது. வருகிற 28ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வருகை தர உள்ளார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பாகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நமது மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.