அரசு கல்லூரிகளில் ஷிஃப்ட் முறையில் மாற்றம்!!! மாணவர்கள் அதிர்ச்சி…

தமிழகத்தில் 114 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 65-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலை, மாலை என்று இரு பணி நேர முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இதில் காலை வகுப்புகள் காலை 8.45 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாலை வகுப்புகள் பிற்பகல் 1.30 மணிமுதல் 6.00 வரை இயங்கி வருகிறது. காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில் மாலையில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதால் இரு மணி நேர முறை என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே பணி நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

புதிய பணிநேரத்தின்படி இனி காலை பத்து மணிக்கு துவங்கும் வகுப்புகள் மாலை 4 மணிக்கு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.