தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு என்ற தலைப்பிலான கலந்துரையாடல்

தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) நடத்திய தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு என்ற தலைப்பிலான கலந்துரையாடல் டி எஸ் எப் கிராண்ட் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. தூத்துக்குடி சிஐஐ தலைவர் கிருஷ்ணா சங்கர் தலைமை தாங்கினார். சிஐஐ தமிழ்நாடு துணைதலைவர் ஹரி தியாகராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தொழில்நகரமாக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் வரஉள்ளன.இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டணத்தில் அமைக்கஉள்ளது, நாட்டிலே இரண்டாவது ராக்கெட் ஏவுதளமான இதற்காக 2300 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணி விரைவில் முடிவடையும் என்றார். அடுத்ததாக தூத்துக்குடியில் துபாயில் உள்ள நிறுவனம் 49000கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதெல்லம் 5முதல் 10 ஆண்டுகளுக்குள் இங்கு வந்து விடும். இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெறுவார்கள், அதை சார்ந்த பல தொழிற்நிறுவனங்கள் வரும்,மாவட்டத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றார். தூத்துக்குடி இரயில் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது,ஆனால் அதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருந்தபோதும் சிஐஐ போன்ற அமைப்புகள் பாராளுமன்ற உறுப்பினர், ரயில்வே உயர் அதிகாரிகள்,மத்திய அரசு மூலமாக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றார். தூத்துக்குடி முதல் மணியாச்சி வரை சாலை அமைப்பதற்காக நிலம் கையகபடுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 600 ஏக்கர் நிலம் கையக படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 100 ஏக்கர் கையகபடுத்தபடும் நடைபெற்று வருகிறது. இரவு நேர விமான சேவைக்கு வனத்துறை அனுமதி வழங்கவேண்டி உள்ளது. விரைவில் இரவு நேர விமான சேவை இயக்கபடும் என்றார். மாவட்டத்தில் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளன. உடன்குடி அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. கயத்தாறு பகுதியில் ஏராளமான காற்றாலைகள் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக கடல்நீரை நன்னீராக்கும் 60 எம் எல் டி சுத்திகரிப்பு ஆலை அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மேலும் பல தொழிற்சாலைகள் வரஉள்ளன என்றார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு

அருகே 50 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அருகாமையில் அமையும். தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் வருவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். முக்கியமான நோக்கம் தூத்துக்குடியில் முற்றிலும் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக மாற்றவேண்டும் என்பது தான். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தொழிற்சாலைகள் வர உள்ளதால் தொடர்ந்து சிறு சிறு உற்பத்தி நிறுவனங்கள் வரும் அதற்கு தேவையான நிலங்கள் தயாராக உள்ளன என்றார். அமைய உள்ளதால் சிஐஐ தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தவேண்டும்,இது அதற்கு தகுந்த நேரம் என குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி,விவசாயம், உடன்குடி கருப்பட்டி உள்ளிட்ட பல தொழில் வளங்கள் அவற்றை மேம்படுத்தும் வகையில் பல தொழில் நிறுவனங்கள் கூட்டத்தை நடத்த மேம்படுத்த வேண்டும் என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகள் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் புதிய தலைவராக பிரவீண் மேத்யு, துணை தலைவராக மைக்கல் மோத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து வருங்கால சந்ததியினரை தொழில் முனைவோர்களாக உருவாக்குதல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தங்கமயில் ஜீவல்லரி அதிபர் பல்ராமா கோவிந்த தாஸ், கோவை ரூட்ஸ் இந்தியா மற்றும் ஆர்.வி குரூப் நிறுவன மேலாண் இயக்குநர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.