சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.V.அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவை தெரிவித்துள்ளனர்.
சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுக்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் அதாவது அதிமுகவின் ஊழல்கள் குறித்த புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட திரு.அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல முற்போக்கு அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளன.
Credits : Seithikkural