குறைந்த கட்டண விலையில் முகமூடி சோப்பு ஆயில், கிளினர் விற்பனை அங்காடி : தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய அம்மா மருந்தகம் அருகில் உள்ள மகளிர் திட்ட வணிக வளாகத்தில் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா இன்று (25.03.2020) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு அங்காடியை திறந்து வைத்தார். 
அந்த அங்காடியில் 2 லீப் மாஸ்க் ரூ.8க்கும், 3 லீப் மாஸ்க் ரூ.10க்கும், கிருமி நாசினி (லைசால்) ½ லிட்டர் ரூ.50க்கும், கிருமி நாசினி (லைசால்) 1 லிட்டர் ரூ.100க்கும், சோப்பு திரவம் ½ லிட்டர் ரூ.40க்கும், சோப்பு திரவம் 1 லிட்டர் ரூ.80க்கும், கை கழுவும் திரவம் ½ லிட்டர் ரூ.250க்கும், கை கழுவும் திரவம் 1 லிட்டர் ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அங்காடி அமைந்துள்ள இடங்கள்:

 1. மதி அங்காடி, ஆதிநாதபுரம், திருவைகுண்டம் மெயின் ரோடு, ஆழ்வார்திருநகரி,
 2. மதி அங்காடி, எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில், ஓட்டப்பிடாரம்,
 3. மதி அங்காடி, காமராஜ்நகர், போலையார்புரம் விலக்கு, சாத்தான்குளம்,
 4. ஆ.ஆ. டெய்லர், காந்திநகர், படுக்கப்பத்து, சாத்தான்குளம்,
 5. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, விளாத்திகுளம்,
 6. மகேஸ்வரி பேன்ஸி ஸ்டோர், புதூர் பேருந்து நிலையம் அருகில், புதூர்,
 7. ஊராட்சி ஒன்றிய அலுவலக வணிக வளாகம், திருவைகுண்டம்,
 8. மகேஸ்வரி மதி அங்காடி, ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில், கோவில்பட்டி,
 9. எஸ்ஏ ஜெராக்ஸ் கடை, 236, மதுரை மெயின் ரோடு, டி.எம்.பி. பேங்க் அருகில்,   கயத்தார்,
 10. மதி அங்காடி, காவல் நிலையம் அருகில், செய்துங்கநல்லூர்,
 11. வணிக வளாகம், பேருந்து நிலையம் அருகில், திருச்செந்தூர்,
 12. மதி அங்காடி, கூட்டாம்புளி மெயின் ரோடு, ஜெயம் காய்கறி கடை அருகில், தூத்துக்குடி,
 13. வணிக வளாகம், பேருந்து நிலையம் அருகில், உடன்குடி,
 14. வணிக வளாகம், புதிய பேருந்து நிலைய அம்மா மருந்தகம் அருகில்,

என மொத்தம் 14 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.