மனஉறுதி

மனஉறுதி

மனஉறுதியுடன் பணியாற்றுவது வெற்றியை உறுதிபடுத்துகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, நம்முடைய வெற்றியின் மீது நமக்கு அனைத்து நேரங்களிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆதலால், ஒன்றை செய்வதற்கான சந்தர்பம் இருக்கும்போதும், நம்மால் நம்முடைய சிறப்பான முயற்சியை கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு புது சூழ்நிலையும் ஒரு அச்சுறுத்தலாக உணரப்படுகின்றது. பயந்துவிட்டோமானால், சூழ்நிலை மோசமடைவதுடன், மேலும் வெற்றிக்கான அனைத்து சந்தர்ப்பங்களும் மறைந்துவிடுகின்றன.

செயல்முறை:

நான் மனஉறுதியுடன் இருக்கும்போது, எனக்கு வெற்றியின் மீது நம்பிக்கை இருக்கின்றது. இந்த நம்பிக்கையானது, நான் வெற்றிபெறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு என்னை அனுமதிக்கின்றது. நான் ஒருபோதும் எதையும் அரைகுறையாக விட்டுவிடாமல் அக்காரியத்தை நிறைவேற்றுகின்றேன். ஒவ்வொரு தடையின் மூலமும் என்னுடைய மனஉறுதி அதிகரிக்கிறது, அதனால் ஒவ்வொரு அடியிலும் நான் முன்னேறுகின்றேன்.