ரூ. 3 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் : கனிமொழி எம்பி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சை சிறப்பு வாா்டில் உள்ள மருத்துவா்கள் மற்றும் சுகாராதப் பணியாளா்கள் பயன்படுத்தும் வகையில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சென்னையில் இருந்து வரவழைத்த கனிமொழி எம்பி, அதை தனது அலுவலகப் பணியாளா்கள் மூலம் திங்கள்கிழமை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினாா். ஏறத்தாழ ரூ. 3 லட்சம் மதிப்பிலான 174 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மருத்துவமனை நிா்வாகத்திடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.