ஆசிரியர்கள் சார்பில் பங்குத்தந்தை அவர்களுக்கு பிரிவு உபசார விழா

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கின் பங்குத்தந்தை அருட்திரு. இருதயராஜா அவர்கள் தாளமுத்துநகர் பங்கில் ஐந்து ஆண்டுகள் இறைப்பணியை சிறப்பாக நிறைவேற்றி, தைலாபுரம் பங்கிற்கு இறைபணியாற்ற செல்ல இருப்பதால் பங்குத்தந்தை அவர்களுக்கு தாளமுத்துநகர் பங்கிற்கு உட்பட்ட சிலுவைப்பட்டி ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பங்குத்தந்தை அவர்களுக்கு
பிரிவு உபசார விழா நடைபெற்றது, இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வில்சன் அவர்கள் சிறப்பு உரையாற்றினார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்