இரண்டாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு: ஆரோக்கியபுரம்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் இரண்டாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

இன்று காலை 9,00 மணியளவில் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸ் அப் குழு சார்பில் இலவச கபசுரக் குடிநீர் ஆரோக்கியநாதா் ஆலய கொடி மரம் முன்பு இரண்டாம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருக்குடும்ப சபையின் தலைவி சந்தனம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார். பொதுமக்களும், பணியாற்றும் நண்பர்களும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக் குடிநீரை பெற்றுச் சென்றனா்.