துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 22, 2018 அன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது,

அதைப்போல் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடபட்ட அறிவிப்பில் மே 22ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் யாரும் பொது இடங்களில் கூட அனுமதி இல்லை. மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் யாரும் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக செல்ல அனுமதி இல்லை மேலும் பொதுமக்கள் கூடும் பகுதியினை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.

மேலும் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் அமைக்க கோரியும், மே 22ம் தேதியை மண்ணை காத்த தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியறுத்தினார்கள்.