தருவைகுளத்தில் கடத்தப்பட்ட கடல் ஆமைகள் பறிமுதல்- மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் உயிருடன் கடல் ஆமைகள் கடத்தப்படுவதாக மெரைன் போலீசாருக்கு நேற்றிரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்

இதனை தொடர்ந்து மெரைன் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து தருவைகுளம் கடற்கரையில் மேற்கொண்ட சோதனையில் உயிருடன் பிடிக்கப்பட்டு குட்டியானையில் கடத்தப்படவிருந்த 5 கடல் ஆமைகளை மீட்டு வனத்துறையினர் மெரைன் போலீஸ் உதவியுடன் மீண்டும் கடலில் விட்டனர்

இது தொடர்பாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்த வனத்துறையினர் ஓட்டுநரை கைது செய்தனர்.
மேலும் வனத்துறையினர் தப்பியோடிய தூத்துக்குடி பாத்திமாநமரை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்

இது தொடர்பாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.