தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு விடுமுறை

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் LKG, UKG, (Pre- KG உட்பட) வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் 16.03.20 முதல் 31.3.20 வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் LKG, UKG, (Pre- KG உட்பட)வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் LKG (Pre- KG உட்பட) வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.03.20 முதல் 31.3.20 வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட வகுப்புகளுக்கு 16.03.20 முதல் 31.3.20 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது சார்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.