ஒரு நாள் கலெக்டராக.. பள்ளி மாணவி!!!

பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் சர்வதேச பெண்கள் தின கொண்டாடத்தில் ஒரு பகுதியாக ஒரு வார காலத்துக்கு சிறந்த சில பள்ளி மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நாள் கலெக்டராக செயல்பட்டு அசத்தி உள்ளார் புல்தானா மாவட்ட பள்ளி மாணவி பூனம் தேஷ்முக். இது தொடர்பாக புல்தானா மாவட்ட கலெக்டர் சுமன் ரவாத் சந்திரா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.