பள்ளி வாகனம் வழங்கும் விழா – வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளி

பள்ளி வாகனம் வழங்கும் விழா – வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளி

தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் தலைவராகவும் மற்றும் ஒத்த சிந்தனையுள்ள 15 அரசு உயர் அதிகாரிகள் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் கொண்டு கில்டு ஆப் சர்வீஸ் – தூத்துக்குடி என்ற அமைப்பின் மூலம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் அன்று முத்தம்மாள் காலனியில் தொடங்கப்பட்டது.

தற்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் சந்தீப் நந்தூரி அவர்களை தலைவராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறுமை நிலையில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்கள் புற உலகு சிந்தனை இல்ல்லாதவர்கள் (ஆட்டிசம்) மூளை முடக்கு வாதம் மற்றும் பல்வகை மாற்றுத்திறன் உள்ளவர்களின் நல்வாழ்விற்க்காக சிறப்பான சேவை வழங்கி வருகிறது.


வழங்கப்படும் பயிற்சிகள்:
14 – வயதிற்கு உட்பட மாணவ மாணவிகளுக்கு சிறப்புக் கல்வி.
14 – வயதிற்கு மேற்பட்ட மாணவ – மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி, பிசியோதெரபி பயிற்சி, நடைபயிற்சி, யோகா பயிற்சி, மற்றும் விளையாட்டு இலவச வசதிகள், இலவச வாகன வசதி, மத்திய உணவு (சத்துணவு), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாதந்திர மருத்துவ பரிசோதனை, மேற்கண்ட அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆட்டிசம் ஆரம்ப கால பயிற்சி மையம்: மார்ச் 1, 2019 முதல் தூத்துக்குடி மாவட்டத்திலேயே பிரத்தியேகமான ஆட்டிஸம் ஆரம்ப கால பயிற்சி மையம் (இரண்டு வயது முதல் 10 வயது வரை) உள்ள குழந்தைகளுக்கு தொடங்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

தற்போதுபள்ளியில் 46 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர் தகுதி வாய்ந்த திறமைமிக்க சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற பிசியோதெரபிஸ்ட் மூலம் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன தற்போது பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் ரூபாய் 17.22 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனம் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமை நிலைக்கு கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்கள் புற உலகு சிந்தனை இல்லாதவர்கள் மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை மாற்றுதிறன் உள்ளவர்களின் நல்வாழ்விற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி இப்படி சிறப்பான சேவையை ஆற்றி வருகின்றது.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக திரு.M அண்ணாதுரை CGM (Retail sales) TNSO இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், திரு.S.சீதாராமன் GM (HR) TNSO இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், திரு.S. விஷ்ணு சந்திரன் IAS கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வருவாய்) தூத்துக்குடி, திரு.N. பாலசுப்பிரமணியன் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி தூத்துக்குடி), திரு.K.P. பிரம்மநாயகம் (மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தூத்துக்குடி), திரு. திராவிடமணி சாமி பியூல் சர்வீஸ் உரிமையாளர், திருமதி க.கவிதா தலைமை ஆசிரியை (வித்தியா பிரகாசம் சிறப்பு பள்ளி தூத்துக்குடி), மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்