ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை : தமிழகம்

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் முதல் வாரம் முதல் 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மாா்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 2019-20-ஆம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை செயல்பட்டு, ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்படும். 2020 ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.