பள்ளி மாணவி தற்கொலை – தூத்துக்குடி

தூத்துக்குடி: ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணி கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா(16). இவர் சேதுபாதை ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வந்தார். கடந்த 3ம் தேதி பாட்டி  இறந்ததால் மரிய ஐஸ்வர்யா பள்ளிக்கு தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துள்ளார். இதனால் மாணவியை சக மாணவர்கள் முன் 150 தோப்புக்கரணம் போட வைத்ததால் மனமுடைந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பள்ளி தலைமை  ஆசிரியை கைது செய்யப்பட்டார். கம்ப்யூட்டர் ஆசிரியரை  போலீசார் தேடி வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காத வரை உடலை  வாங்கமாட்டோம் எனக்கூறி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.