பழைய ஏ.டி.எம் கார்டு செல்லாது – எஸ்.பி.ஐ

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ பழைய மேக்னடிக் ஸ்டிப் ஏ.டி.எம் கார்டுகள் ஜனவரி 1 முதல் செல்லாது என்று அறிவித்துள்ளது. அந்த ஸ்டிரிப்களை போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்தால் புதிதாக ஏ.டி.எம் கார்டுகளில் இ.எம்.வி என்ற சிப் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வங்கி நெட்வொர்க் கொண்ட எஸ்.பி.ஐ டிசம்பர் 31 நள்ளிரவுக்குப் பிறகு பழைய ஏ.டி.எம் கார்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட 15 நாட்களுக்குள்ளாக வங்கிக் கிளையை அணுகியோ, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தோ, புதிய ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொள்ளும்படி அந்த வங்கி அறிவித்துள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது.