குடிமராமத்து திட்டத்தில் குளங்களை மராமத்து பணியை எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

சாத்தான்குளம் பகுதியில் நெடுங்குளம், கோமானேரி, புளியங்குளம் பகுதியில் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் குளங்களை மராமத்து பணியை எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் ஒன்றியத்தில் கோமானேரி ஊராட்சிக்குள்பட்ட கோமானேரி குளம் சீரமைக்க ரூ.60லட்சமும், நெடுங்குளம் ஊராட்சியில் நெடுங்குளம் சீரமைக்க ரூ.38லட்சமும், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட புளியங்குளம் சீரமைக்க 60 லட்சமும், பணி திட்ட படி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்குளங்களின் மராமத்து பணி தொடக்க பூமி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு மராமத்து பணியை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் குளத்தில் மடையை இடித்து கட்டுதல், மறுகால் பராமரிப்பு செய்தல், புதிய ஷட்டர் அமைத்தல், குளக்கரைகளை பலபடுத்துதல், தண்ணீர் வரத்து கால்வாயை தூர்வாறுதல், தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளதாக சண்முகநாதன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

இதில் சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி, துணைத்தலைவர் அப்பாதுரை, நெடுங்குளம் ஊராட்சித் தலைவர் சகாய எல்பின், குடிமராமத்து பணி குழு தலைவர் கந்தன், செயலர் மரியதாஸ், பொருளாளர் மகாராஜசுவாமி, பொது பணி துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகாமி, கந்தவள்ளி குமார், ஒன்றிய அதிமுக செயலர் அச்சம்பாடு சௌந்திரபாண்டி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக செயலர் ராஜ்நாராயணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ப்ரெனிலாகார்மல் போனிபாஸ், கோமானேரி ஊராட்சித் தலைவர் கழுங்கடி முத்து, துணைத் தலைவர் ஐகோர்ட்துரை, புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.