கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு

கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த வரதன் என்பவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சால்வை அணிவித்து பாரட்டுச்சான்றிதழ் வழங்கினார்.கடந்த 30.09.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணைவிளையை சேர்ந்த திருமதி. சாராள் என்பவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பண்ணைவிளையிலிருந்து தூத்துக்குடிக்கு புதுக்கோட்டையிலிருந்து சாயர்புரம் சென்று கொண்டிருக்கும்போது தான் வைத்திருந்த மணிபர்ஸை தவறவிட்டுள்ளார்.அதில் ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இரு சக்கர வாகனத்தின் ஆர்.சி. புக், பான் கார்டு, ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் பணமும் வைத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த பேச்சிகனி ஆசீர்வாதம் மகன் வரதன் (34) என்பவர் மேற்படி மணிப்பர்ஸ் கீழே கிடப்பதை பார்த்து, அதை எடுத்து மனித நேயத்துடன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.இதனையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சாமிக்கண் என்பவர் அதில் உள்ள ஆவணங்களை வைத்து, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானராஜ் அந்த மணிப்பர்ஸை, அதன் உரிமையாளரான சாராள் என்பவரிடம் ஒப்படைத்தார்.மேற்படி மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளவர் மறுபடியும் இந்த ஆவணங்களை சேகரிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மனித நேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி வரதன் என்பவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வரதன் என்பவரை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *