சாத்தான்குளம் வழக்கு : விசாரணை சிறப்பு – சிபிசிஐடி போலீசாருக்கு ஐ.ஜி சங்கர் பாராட்டு

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் அதிரடியாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார்,10 பேரை கைது செய்தனர். முதற்கட்டமாக 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றிய சிபிசிஐடி போலீசாருக்கு, ஐ.ஜி சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய சிபிசிஐடி போலீசாருக்கு, வெகுமதி வழங்கி அவர்களை கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில், 10-குழுக்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.