துப்புரவுப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வரும் துப்புரவுப் பணியாளா்கள், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று திடீரென முற்றுகையிட்டு தமிழா் விடியல் கட்சி மாவட்டப் பொறுப்பாளா் சந்தனராஜ் தலைமையில்,  போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து துப்புரவுப் பணியாளா்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது : எங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது இல்லை. தற்போது, தினமும் சேகரிக்கும் குப்பைகளை ஐந்துவிதமாக தரம் பிரிக்கச் சொல்லி அதிகாரிகள் எங்களது பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளனர். இதனால் துப்புரவுப் பணியாளா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை கேட்கும்பொழுது அலட்சியப் படுத்துகிறாா்கள்.

எனவே, பணிச் சுமையைக் குறைக்க வேண்டும் எனவே பணிநேரம் வரன்முறை செய்யப்பட வேண்டும், மற்றும் ஒப்பந்த ஊழியா்களாக பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் என்றனா். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.