சானியா மிர்சா

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் டென்னிசில் களம் இறங்கி சாம்பியனான சானியா மிர்சா

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹபார்ட்டில் சர்வதேச டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றைய தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் உக்ரேன் நாட்டின் வீராங்கனை நடியா கிசோனாக் ஜோடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனாவின் சங்க் சுவாய் மற்றும் பங்க் சூவாய் ஆகியோரை எதிர்கொண்டது.

சானியா மிர்சா ஜோடி 6 – 4, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் ஜோடியை வீழ்த்தி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இது திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் சானியா மிர்சா மீண்டும் டென்னிசில் களமிறங்கி பெற்ற முதல் சர்வதேச சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

-seithikkural