சானியா மிர்சா ஜோடி

ஹோபார்ட் உலக டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்குப் பின்னர் முதல்முறையாக ஹாபார்ட் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்று வந்துள்ளார்.

இதில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்லோவேனியன் மற்றும் செக் குடியரசின் தமரா சுடான்சிக் மற்றும் மரிய பாவ்கோவா ஜோடி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மற்றும் உக்ரேன் நாட்டின் வீராங்கனை நடியா கிக்னாக் ஆகியோர்களை எதிர்கொண்டது. இதில் ஆட்டத்தின் முடிவில் சானியா மிர்சா ஜோடி 7க்கு – ஆறு, ஆறுக்கு – இரண்டு என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

-seithikkural