தவணை கேட்டு நெருக்கடி தரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை!!

மத்திய அரசு வங்கிகடன் தவணை தொகை செலுத்த 6மாதகால அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நெருக்கடிதரும் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாக கடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச்-2020 முதல் 31.08.2020 வரையிலான 6மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. கடன் தவணை தொகையையும், வட்டிதொகையையும் 6மாதம் கழித்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக/நகர்ப்புற பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனுக்கான தவணை தொகை மற்றும் வட்டியை செலுத்துமாறு அரசு மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார்கள் வந்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்களாகவேமுன் வந்துகடன் தவணை தொகையை திருப்பிசெலுத்தினால் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அதனைபெற்றுக் கொள்ளலாம். இதற்குமாறாக அரசுவங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவுசங்கங்கள், நிதிநிறுவனங்கள் கடன் தவணைமற்றும் வட்டிதொகையை உடனடியாக செலுத்துமாறு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நெருக்கடிதந்தால் இந்தநிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, வங்கிகளும், நிதிநிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி கடன் தவணை தொகையை திருப்பி செலுத்துவதற்கு 6 மாதகால அவகாசம் வழங்க வேண்டும். கடனுதவி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சிறப்புகடனாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6.73கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடனுதவி தேவைப்பட்டால் மகளிர் திட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யதயாராக உள்ளனர்.

எனவே, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குகடன் பெற முறையான வழிகளை பின்பற்ற அந்தந்த கிராம பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். தவணை தொகையை திருப்பி செலுத்தவாய்ப்பு இல்லாதமகளிர் குழுக்கள் 6மாத தவணை நீட்டிப்பு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.