சாம்சங் பிரியர்களே! ஜனவரி 21 வரை வேற போன் எதையும் வாங்காமல் ரெடியா இருங்க!

ஜனவரி 21 ஆம் தேதியன்று சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி நோட் 10 லைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘நோட்டிஃபை மீ” விருப்பத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது சமீபத்தில் கேலக்ஸி எஸ் 10 லைட் உடன் சிஇஎஸ் 2020 நிகழ்வில் அறிமுகம் ஆனது. இதற்கிடையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட் ஆனது இந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனவரி 21 அன்று அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்டை பொறுத்தவரை, அடுத்த வாரம் முதல் முன்பதிவுகளை தொடங்கும் மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் சில்லறை கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது இந்தியாவில் ஆரா க்ளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாக வாய்ப்புள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரண்டு மெமரி வகைகளில் வாங்க கிடைக்கும். இதன் 6 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது சுமார் ரூ.39,900 என்கிற புள்ளியில் தொடங்கலாம்.

அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 2400 x 1080 பிக்சல்கள் மற்றும் 394 பிபி பிக்சல் அடர்த்தி கொண்ட ஸ்க்ரீன் ரெசல்யூஷனையும் கொண்டுள்ளது.

கேமரத்துறையை பொறுத்தவரை, 12 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 1.7) டூயல் பிக்ஸல் கேமரா + 12 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.4) டெலிஃபோட்டோ லென்ஸ் + 12 மெகாபிக்சல் அளவிலானா (எஃப் / 2.2 ) வைட் ஆங்கிள் லென்ஸ் என்கிற ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 32 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.2 ) செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி நோட் 10 லைட் ஆனது சாம்சங் எக்ஸினோஸ் 9810 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 72 எம்.பி 18 ஜி.பீ மூலம் இயங்குகிறது.

இது 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான OneUI 2.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 162.5 x 75.6 x 8.1 மிமீ மற்றும் 186 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், எம்எஸ்டி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

-tamil samayam