60 நாட்களுக்கு பின் தூத்துக்குடி நகர்ப்புறங்களில் திறக்கப்பட்ட சலூன் கடைகள்

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் சென்னை மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து இடங்களிலும் சலூன் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நகாின் முக்கிய பகுதிகளில் சலூன் கடைகள் 60 நாட்களுக்கு பின் இன்று காலை திறக்கப்பட்டது. மஞ்சள் கலந்த நீாினால் தெளிக்கப்பட்டு சாமி படங்களுக்கு பூ போட்டும், சூடம் ஏற்றி, முடிவெட்டும் போது முக கவசம், கையில் பாதுகாப்பு கையுறை மற்றும் தலைக்கவசம் என பாதுகாப்பாக முடி வெட்டும் நம்ம ஊரு சலூன் கடைக்காரர்.