கஞ்சா சாக்லெட்கள் விற்பனை – சென்னை

பீகாரில் இருந்து சென்னை வந்த 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளில் சுற்றித் திரிந்தனர். அவர்களின் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அவர்களை பிடித்து விசாரித்ததில், மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். அவர்களின் பையை சோதித்து பார்த்த பொழுது 200 போதை சாக்லெட்களுடன், கஞ்சா பாக்கெட்களும் இருந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகள், போதை தரும் சாக்லேட்களை கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போதை சாக்லெட்களைக் கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.