ஆர்டிஓ அலுவலகங்கள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாகனப்பதிவு, லைசென்ஸ் வழங்குதல், தகுதிச்சான்று பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துவங்கிவிட்டது.