திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான வியாபாரிகள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 25 லட்ச ரூபாய் நிதி உதவியை கனிமொழி எம்பி நேரில் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை தாக்கியதால் இறந்தனர் இதைத்தொடர்ந்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் நேற்றுசொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு கொண்டு வந்தனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தொகுதி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன், ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சன்முகையா உள்ளிட்டவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலுக்கு மலர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவர்களது உடல் அங்குள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ சர்ச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜெபம் செய்யப்பட்ட பின்னர், கல்லறை தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் காவல்துறை தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவி திமுக சார்பில் வழங்கப்படும் என அறிவித்தார் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி சாத்தான்குளத்தில் உள்ள அவர் வீட்டிற்கு நேரில் சென்று திமுக சார்பில் 25 இலட்ச ரூபாய்க்கான காசோலையை அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஆறுதலையும் தெரிவித்தார் இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்