



தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ரூ . 17 . 5 இலட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட புதிய ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலக கட்டடத்தினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு . கடம்பூர் செ.ராஜு அவர்கள், திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டடத்தின் கல்வெட்டினை வைத்தார். அருகில் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு . எஸ் . பி . சண்முகநாதன் அவர்கள் (திருவைகுண்டம் ) , திரு . சின்னப்பன் அவர்கள் ( விளாத்திகுளம் ) தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் ( பொ ) திருமதி . இந்துமதி மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். அதன் பின்பு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கூட்டுறவுத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். மற்றும் மகளிர் திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை , மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் வழங்கினார்.