75 ஏழைப் பெண்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை : தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி 75 ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் COVID- 19 ஊரடங்கு நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கியது.

உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தருவைகுளம், பழையகாயல் மற்றும் கோரம்பள்ளம் மறவன்மடம் கிராமங்களில் கொரனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 75 ஏழைக் குடும்பங்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் தூய மரியன்னை கல்லூரி வழங்கியது. தருவைகுளம் பங்குத்தந்தை அருட்தந்தை.எட்வர்ட் அடிகளார், பழையகாயல் பங்குத்தந்தை அருட்தந்தை. சகாய ராயன் மற்றும் கோரம்பள்ளம் மறவன்மடம் கிராமத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை. அல்பின் லியோ ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் தலா 25 விதவைப்பெண்கள் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வோரின்குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன. கோவிட்-19 கொள்ளை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவினால் அவதியுறும் ஏழைப் பெண்களின் குடும்பங்களுக்கு உதவ தங்களின் பங்களிப்பை ஆர்வத்தோடு தூய மரியன்னை கல்லூரி இந்நலத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது. தூய மரியன்னை மகளிர் கல்லூரியின் நிர்வாகத்தினர் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி புளோரா மேரி, கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூசியா ரோஸ் மற்றும் கல்லூரி துணை முனைவர் அருட்சகோதரி சிபானா ஆகியோரின் ஆலோசனையில் பொருளுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் அவர்கள் இந்த பொருளுதவி கிராம மக்களை சென்றடைய ஏற்பாடுகள் செய்தார்.