இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயம் வழங்கும் விழா

தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அவரது உருவம் பொறித்த ரூ 100, ரூ 5 நாணயங்கள் விழாவில் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் அவரது உருவம் பொறித்த நாணயம் வழங்க மத்திய அரசை வற்புறுத்திவந்தது. அது போல் எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளில் அவரது உருவம் பொறித்த தபால் தலை வெளியிடவும் தொடர்ந்து வற்புறுத்திவந்தது. மத்திய அரசு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட நிதி அமைச்சகம்தான் முடிவு எடுக்க முடியும் அறிவித்தது.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் தொடர்ந்து நிதி அமைச்சகத்தை வற்புறுத்தி கோரிக்கை மனு அனுப்பி வந்தது. தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கையை இந்திய ரிசர்வ வங்கி ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ5 நாணயங்கள் பெற ரூ 3055 கட்டணம் நிர்ணயம் செய்தது. தமிழக முழுவதும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் ரிசர்வ் வங்கிக்கு கட்டணம் அனுப்பிவைத்தனர். தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றத்தினர் பணம் செலுத்தினர். முதற்கட்டமாக 25 பேருக்கு இந்திய ரிசர்வ் வங்கி எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் அனுப்பிவைத்தது. நாணயத்தில் வெள்ளி, காப்பர், நிக்கல், சினிக் போன்ற உலோகங்கள் கலந்து உள்ளது. எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி எம்.ஜி.ஆர் சிலை க்கு மன்றத்தினாமாலை அணிவித்து அதன்அருகே நடத்தினர்.
விழாவிற்கு முன்னாள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மு.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ100, ரூ 5 உருவநாணயங்களை தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.மோகன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகராட்சி முன்னாள் துணை தலைவர் ரத்னம், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் எஸ்.சாமுவேல், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் செங்குட்டுபவன், மின்சார வாரிய முன்னாள் அலுவலர் பால்ராஜ், முன்னாள் கோஆப்டெக்ஸ் அலுவலர் அய்யம்பெருமாள், கருங்குளம் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சேரந்தையன், ஆசைத்தம்பி, உட்பட பலர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ்.மோகன், எஸ்.சாமுவேல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.