மலைப்பிரதேசங்களில் விபத்துகளை தடுக்க சுழலும் ரப்பர் உருளை அமைப்பு

மலைப்பிரதேசங்களில் உள்ள தடுப்பு சுவர்கள் உறுதியாக இல்லாததால் அங்கு விபத்துகள் நடைப்பெறுகின்றன. வாகன ஓட்டிகள் கவனமாக சென்றாலும் கூட, மலைப்பாதைகள் சீராக இல்லாமலும், வளைந்து வளைந்து செல்வதும் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. மலைப்பிரதேசங்களில் நடக்கும் இந்த விபத்துகளை தடுக்க சுழலும் ரப்பர் உருளை போன்ற தடுப்பு சுவர் அமைக்கப்பட்டால் சுழலும் ரப்பர் உருளை, வாகனம் மோதினால் அதனை விபத்தில் இருந்து காத்து விடும். இதனை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் சுழலும் ரப்பர் உருளை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.