ரோஜா இதழ் கசாயம்

ரோஜா இதழ் கசாயம்

சர்க்கரை நோய் என்றால் என்ன ?

சாப்பிடுகின்ற உணவில் இருக்கும் சத்துகள், உடலுக்கு தேவைப் படும்போது பயன்படுத்தப் படுவதற்காக கொழுப்பு அமிலங்களாக சேமிக்கப் படுகின்றன.

எப்போது எல்லாம் உடலுக்கு தேவையோ அப்போதெல்லாம் இந்த கொழுப்பு அமிலங்கள் உடைக்கப் பட்டு, சத்து எடுக்கப் பட்டு, உடலின் இயக்கத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. கொழுப்பாக சக்தியாக சேர்க்கப்பட்ட பொருட்கள், உடலில் சேராமல், உடலை விட்டு சிறுநீரில் வெளியேறுவதுதான் நீரிழிவு நோய் ஆகும் உடலுக்கு தேவையான சக்திகளை சேர்த்து வைக்க முடியாமல், உடலை விட்டு வெளியேறுவதுதான், இந்த மோசமான சர்க்கரை நோய் ஆகும்

இதைக் கட்டுபப்டுத்த குணமாக்க

1.வெளியேறும் சர்க்கரையை கட்டுப் படுத்துவதற்கான முயற்சி,
2.அதிகமான இனிப்பான பொருட்கள் உணவில் இல்லாமல் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவது,
3.உடலுடைய பலத்தை ஆக்கபூர்வமான வளர் சிதை மாற்றங்களை ஊக்குவிக்கும் பொருட்களை சேர்த்துக் கொள்வது,
ஆகிய மூன்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறை ஆக கையாளப் படுகிறது .

ஆயுர்வேத மருத்துவ முறைப்படி கபத்தினால் வரும் பத்து வகை சர்க்கரை நோய்களும் குணப் படுத்தக் கூடியவை, பித்தத்தினால் வரும் ஆறுவகை சர்க்கரை நோய்களும் குணப் படுத்தக் கூடியவை. வாதத்தால் வரும் இரண்டு வகை சர்க்கரை நோய் மருந்துகளால் குணப் படுத்த முடியாது ஆனால் கட்டுக்குள் வைக்க முடியும் வாதத்தால் வரும் இரண்டு வகை சர்க்கரை நோய் மருந்துகளால் கட்டுப் படுத்தவோ குணப் படுத்தவோ முடியாது என இருபது வகைப் படுத்தப் பட்டுள்ளது. வாத மாறுபாட்டால் வரும் சர்க்கரை நோயினால் என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறை மாற்றம் உடல் பயிற்சி செய்தாலும் எவளவு முயற்சி செய்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வராது பக்க விளைவுகளாக சிறுநீர் கழிக்கும்போது சர்க்கரை வெளியேறி உடல் கரைந்து கொண்டே வரும் எவ்வளவு முயற்சி செய்தாலும் கட்டுப்படாமல் அனைத்து பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் சர்க்கரை நோய் காரணமாக கண்கள் நரம்புகள் ஈரல் இதயம் சிறுநீரகம் கால் கைகளுக்கு போகும் நரம்புகள் போன்றவை பாதிக்கப் பட்டு பக்க விளைவுகள் ஏற்பட்டு பெருந்துன்பத்தை தருகின்றன
சர்க்கரை நோய் வந்தால் கட்டுப் படுத்த கூடிய குறைக்கக் கூடிய பக்க விளைவுகளை குறைக்க கூடிய மருந்து இது சர்க்கரை நோய்கள் ஏற்பட காரணம் எதுவாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தக் கூடிய பக்க விளைவுகளை மாற்றக் கூடிய அரு மருந்து இது நாட்டுப் பன்னீர் ரோசா இதழ்கள் – இரண்டு கிராம், ஆவாரம் பூ – இரண்டு கிராம், நெருஞ்சில் முள் – இரண்டு கிராம் ஆகிய மூன்று பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவின் படி எடுத்து, நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் காய்ச்சி, நூறு மில்லி கசாயாமாக சுருக்கி இறக்கி வடிகட்டி, நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள், உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக் குடித்து வர வேண்டும் . மிகவும் சுவையாக இருக்கும், ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிட வேண்டும் இதை ஒரு மருந்தாக அல்ல ஒரு மூலிகை தேநீராகப் பயன்படுத்தி நலமுடன் வாழலாம் .