ரோஜர் ஃபெடரர்

வெற்றியை விட தோல்வியில் இருந்து தவறுகளைத் தெரிந்து திருத்திக் கொள்ளலாம் ரோஜர் ஃபெடரர்

வெற்றியை விட தோல்வியில் இருந்து தவறுகளைத் தெரிந்து திருத்திக் கொள்ளலாம் ரோஜர் ஃபெடரர்

ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கும் ரோஜர் ஃபெடரர் பேசுகையில் இந்த முறை என் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என்பதை நன்கறிவேன். இருந்தாலும் முதல் மூன்று சுற்றுகளை கடப்பதில் என் கவனம் இருக்கும். அதன் பிறகு மனதை திடப்படுத்தி பொறுமையுடன் என் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் கோப்பையை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பள்ளியில் படிக்கும்போது தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டேன். அதிருப்தியை தற்பொழுது கையாண்டு வெற்றி பெற முயற்சி செய்வேன் எனக் கூறியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய வரலாறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஓய்வு பெறப் போகிறார் என 2019ஆம் ஆண்டு கணிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 4 ஏடிபி பட்டங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

-seithikkural