செல்போன் டவர் வருவதை எதிர்த்து சாலைமறியல் : தூத்துக்குடி

தூத்துக்குடி வண்ணாா் 2 வது தெருவில் அமைக்க இருக்கும் செல்போன் டவருக்கு அந்த பகுதியில் ஒரு வீட்டில் அனுமதியில்லை என்றால் கூட அமைக்க இருக்கும் , செல்போன் டவரை அமைக்க கூடாது என தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவா் பால்ராஜ் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதை அறிந்து காவல்துறையினா் சம்ப இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன், துணைத் தலைவா் தங்கம், மாநில செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, கிழக்கு மண்டல தலைவா் சந்தனக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.