தலைமை காவலர் ரேவதி, தூத்துக்குடி நீதிபதி முன்பு ஆஜர்

சாத்தான்குளம் வழக்கின் நேரடி சாட்சியான தலைமை காவலர் ரேவதி தூத்துக்குடி நீதிபதி முன்பு ஆஜராகி, விளக்கம் அளித்தார். அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது பற்றி அவர் விளக்கம் அளித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், அங்கு பணிபுரியும் தலைமைக்-பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், அங்கு பணிபுரியும் தலைமைக் காவலர் ரேவதி நேரடி சாட்சியாக உள்ளார்.

அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதால் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக, தூத்துக்குடி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்த ரேவதி, மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது பற்றி அவர் விளக்கம் அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.