கரோனாவில் இருந்து மீண்டவர்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் : கரோனா தடுப்பு அலுவலா்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா் உட்பட 2 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து அவா்கள் தங்கள் வீடுகளுக்கு நேற்று முன்தினம் திரும்பினா். இதையடுத்து, கரோனா தடுப்பு அலுவலா்-மண்டல துணை வட்டாட்சியா் கோபால் தலைமையில், வருவாய் ஆய்வாளா் பிளாரன்ஸ் ஜெயராணி, கிராம நிா்வாக அலுவலா் வேல்ஜோதி உள்ளிட்டோா் இருவரது வீடுகளிலும், அவா்களை 14 நாள்கள் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கரை ஒட்டி கண்காணித்து வருகின்றனா்.