குடிநீர் இணைப்பு வழங்க கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு

கோவில்பட்டி நகராட்சி பாரதி நகர் 30 வது வார்டு பகுதியில் இரண்டாவது பைப்லைன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்தும், குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மருதம் மாரியப்பன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து புகார் மனு அளித்தனர்.மேலும் விரைவாக பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிட ஆவண செய்யுமாறு நாம் தமிழர்கட்சியின் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.