ஞாபகம் வருதே – நார்கட்டில்!

தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரத்தில் E. செல்லத்துரை என்பவர் கட்டில் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் சொந்த ஊர் சீன மணலுர். இதற்குமுன் இத்தொழிலில் 120 பேர் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தார்கள். தற்போது 3 பேர் மட்டும் தொழில் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் மக்கள் தங்கள் பழமையை மறந்து ஆடம்பரமான வாழ்க்கைக்கு மாறியதே காரணமாகும். மக்கள் எப்போது நார்கட்டிலிருந்து மெத்தைக்கு மாறினார்களோ அன்றிலிருந்து இன்று வரை நார்கட்டில் உற்பத்தி குறைந்தது.

முழு வீடியோ பார்க்க : https://youtu.be/0KIBqUjw6So

மேலும் அவர் நமது Timesstamp News செய்தியாளரிடம் கூறும் போது கடந்த சில வருடங்களில் வீட்டிற்கு ஒரு நார்கட்டில் என இரண்டு முதல் நான்கு பேர் உட்காரும் வசதி கொண்ட நார்கட்டில் இருந்து வந்தது. அன்றைய காலத்தில் மக்கள் நார்கட்டில் வாங்குவதை விரும்பினார்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் நார்கட்டில் வாங்குவதை தவிர்த்து விட்டனர். எனக்கு விவரம் தெரிந்து 15 வயது இருக்கும் போது நார்கட்டில் விலை 3 ரூபாய் முதல் 18 ரூபாய் என வருடந்தோறும் விலை உயர்வால் இப்போது ரூபாய் 3500 வரைக்கும் விற்கப்படுகிறது. அந்த காலத்தில் நார் மட்டைகள் குறைந்த விலையில் அதிகமாகவே கிடைத்தது. இன்றைய சூழ்நிலையில் நார் மட்டைகள் விலைகள் அதிகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட தென்காசி, உடன்குடி மற்றும் பூச்சிகாடு போன்ற பகுதிகளில் கிடைக்கின்றது. நார்கட்டிலில் கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது, நார்கட்டிலில் படுத்தால் உடல் வலி இருக்காது. குழந்தைகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும், நோயுற்றோருக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் ஏன் அனைவருக்கும் நிம்மதியான உறக்கத்திற்கு பனை நார் கட்டில் ஒன்றே சாத்தியமாகும். இன்றைய காலத்தில் மக்கள் விலையுயர்ந்த மற்றும் கண் கவரும் பொருட்களை வாங்கி பயனுள்ள பழமையானை பொருட்களை இழந்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.