தூத்துக்குடி மாவட்டத்தில் 38 உதவி ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் – எஸ்பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 38 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தூத்துக்குடி வடபாகம் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மத்திய பாகம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சிப்காட் காவல் நிலையத்திற்கும், தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் ராஜமணி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கும்

தாளமுத்து நகர் சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் குரும்பூர் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கும், முறப்பநாடு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கும், முறப்பநாடு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கும்,

தட்டப்பாறை காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கும், புதியம்புத்தூர் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலை எப்போதும்வென்றான் காவல் நிலையத்திற்கும், சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும்

சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் டி ராஜா சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கும், ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தருவைகுளம் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் சிப்காட் காவல் நிலையத்திற்கும்,

ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் ஏரல் காவல் நிலையத்திற்கும், செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கும்

கோவில்பட்டி கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் புதூர் காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் கயத்தார் காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன் கோவில்பட்டி கிழக்கு (கிரைம்) பிரிவுகும்

கொப்பம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் குருச்சந்திரவடிவேல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், நாலாட்டின்புதூர் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி திலிப் கழுகுமலை காவல் நிலையத்திற்கும், கழுகுமலை சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் கடம்பூர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் குளத்தூர் காவல் நிலையத்திற்கும்

சூரங்குடி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும், எப்போதும்வென்றான் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் எட்டையபுரம் காவல் நிலையத்திற்கும், குளத்தூர் சப் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை காடல்குடி காவல் நிலையத்திற்கும்,

திருச்செந்தூர் அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் மேரி குலசேகரபட்டினம் காவல்நிலையத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் அங்குதாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,

கடம்பூர் அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் அங்காள ஈஸ்வரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், குரும்பூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மெய்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும், சாத்தான்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும்,

காடல்குடி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கும், விஆர் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும், தெர்மல் நகர் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் Control Room (OD @ DCRB)க்கும், தூத்துக்குடி தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் இவ்வுத்தரவு உடனே அமலுக்கு வருவதாக மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார்.