நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ. 5000 வழங்க வேண்டும் – இந்திய மாணவர் சங்கம்

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நிவாரண நிதி ரூ. 5000 வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு பதாகைகளோடு கோரிக்கை.

தற்போது உலகமெங்கும் மக்கள் அனைவரும் கொரோனா நோயால் அச்சுறுத்தப் பட்டு வருகின்றனர். இக்கொரோனா தொற்று நோய் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு அறைகூவலின் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் தன்னார்வ பணி செய்யும் இடத்தின் வாசலில் கோரிக்கை பதாகைகளோடு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள், காவல்துறை, தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அவரவர் வீட்டின் கோரிக்கை பதாகைகளை ஏந்தி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.