அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், லோடு ஆட்டோ ஓட்டுனர் ஆகியோரது குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார். மேலும் மணியாச்சி கூட்டுற கடன் சங்கத்தில் இயங்கும் நியாய விலை கடையின் மூலம் 65 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் காவல் துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி. சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு. மோகன், கோவில்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்களை உள்ளனர்.