800 குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் : அதிமுக பிரமுகர்

இந்தியா முழுவதும் கொரொனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான டிஎம்பி காலனி மற்றும் அண்ணாநகர் 1வது தெரு, 2வது தெரு ஆகிய‌ பகுதி மக்களுக்கு ஒரு லோடு அரிசி மூட்டை மற்றும் காய்கறிகள் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பல்லாரி, சீனி அவரைக்காய் மற்றும் ஆரஞ்ச், மாம்பழம், நெல்லிக்காய், மாதுளை போன்ற‌ பழ வகைகளும் சேர்த்து ஒரு பையில் போட்டு 800 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான ஆர்.எல்.ராஜா ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி அதிமுக பிரமுகரும் முன்னாள் அமைச்சரும் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நிவாரணப்பொருட்கள் வாங்க வந்தவர்கள் சமூக இடை வெளியை பின்பற்றும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் மேயரும், கிழக்கு பகுதி செயலாளருமான சேவியர், மேற்கு பகுதி செயலாளர் முருகன் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.