50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார் : நாசரேத் திமுக நகர செயலாளர்

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் தேர்வுநிலைப் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரேசன் கார்டுகள் இல்லாத குடும்பங்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருள்களை நகர செயலாளர் அ.ரவிசெல்வக்குமார் வழங்கினார். இதில், மாவட்ட பிரதிநிதி  சாமுவேல், நகர பொருளாளர் எஸ்.சுடலைமுத்து, எஸ்.டி.பி. தாமரைச்செல்வன்,  மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அருண் சாமுவேல், மாவட்ட தொழில் நுட்பபிரிவு அமைப்பாளர் பேரின்பராஜ், வார்டு செயலாளர்கள் அதிசயமணி நல்லதுரை, உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.