முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் கடைநிலை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மஸ்தூர் பணியாளர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வுபெற்ற சித்த மருத்து அலுவலரும், சித்த மருத்துவ கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளருமான முதலூர் டாக்டர் சிங்காரவேல் முதற்கட்டமாக கரோனா முன் கள தடுப்புபணியாளர்களான கடை நிலை பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கியிருந்தார்.

இதையடுத்து 2ஆம் கட்டமாக நடப்பு மாதமும் 28 கடை நிலை பணியாளர்களுக்கு அரிசி, எண்ணெய் , பலசரக்கு பொருள் மற்றும் ரூ500 ரொக்கப்பணமும் வழங்கினார். மேலும் சிறு குழந்தைகள் உள்ள பணியாளரின் குடும்பத்திற்கு தின்பண்டங்களும் வழங்கினார்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் திணேஷ்,வட்டார சுகாதர மேற்பார்வையாளர் மோரீஸ்,சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.