தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன் விளையில் சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக சாஸ்தாவிநல்லூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரிசி மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் லூர்துமமணி தலைமை வகித்தார். சாஸ்தாவி நல்லூர் விவசாயிகள் சங்கத் தலைவர் காமராஜ், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவி திருக்கல்யாணி, மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் டிஎஸ்பி (பொறுப்பு) பிரதாபன் உதவி தொகையை வழங்கி தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தினார். இதில் சங்க செயலர் ராஜகுமார், சங்கத்துணைத்தலைவர் ராபின்சன், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இருதயராஜ், அருள்ராஜ், அமல்ராஜ், சாந்தி, உஷா, ஆனந்தி, மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.