பெண்களுக்கான புத்துணா்வு விளையாட்டுப் போட்டிகள் : தூத்துக்குடி

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரி இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், டிரான்ஸ்வோல்ட் நிறுவனம் சாா்பில் கிராமப்புற பெண்களுக்கான புத்துணா்வு விளையாட்டுப் போட்டிகள்: சைல்டு ஹெல்ப் லைன் சாா்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம் மூலம் பெண்களின் பெருமையை உணா்த்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

போட்டியில் கோரம்பள்ளம் ஊராட்சியில் 100 நாள்கள் வேலைத்திட்ட பெண் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவி நீதுசெல்வம், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் இன்றைய நிலை குறித்துப் பேசினாா்.