தூத்துக்குடி மீனவர் உடலை அந்தமானில் இருந்து தூத்துக்குடி வரை எடுத்து செல்ல செஞ்சிலுவை சங்கம் உதவி கரம்

கடந்த மார்ச் மாதம் மரியஜோசப் உட்பட 5 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க அந்தமான் பகுதிக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து முடித்துவிட்டு விசைப்படகில் மரிய ஜோசப் உள்பட 5 பேர் தூங்கியுள்ளனர். இதில் மரிய ஜோசப் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து விட்டார். மறுநாள் காலை படகிலிருந்த மற்றவர்கள் எழுந்து பார்க்கும்போது மரிய ஜோசப் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை தேடினர்.இதற்கிடையே அந்தமான் கடற்கரையில் மரிய ஜோசப்பின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்தமான் கடற்படை போலீசார் உடனே அங்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்தமான் கடலில் உயிர் இழந்த தூத்துக்குடி மீனவர் திரு. மரிய ஜோசப் அவர்கள் உடலை அந்தமானில் இருந்து தூத்துக்குடி வரை எடுத்து செல்ல செஞ்சிலுவை சங்கம் (Red Cross society India) உதவி கரம் ஈட்டியுள்ளது.